விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகப் பணியாற்றி அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனந்த் வைத்தியநாதன். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தால் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் இரண்டாவது எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டார். அதோடு இவர் பாடகர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பிக்பாஸ் குறித்துப் பல விடயங்களை பகிர்ந்துள்ளார் அனந்த் வைத்தியநாதன்.
அந்தவகையில் அவர் கூறுகையில் "பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய போதே என்னிடம் கலந்து கொள்ளுமாறு கூறி இருந்தார்கள். ஆனால் அந்த சமயத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனது. அதனால் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டேன். இருந்தாலும் 21 நாட்களில் இரண்டாவது போட்டியாளராக நான் வெளியேறி விட்டேன்.
இந்த போட்டியாளராக நான் அதிகமான நாட்கள் உள்ளே இல்லை என்றாலும் நிகழ்ச்சியிலிருந்து மறக்க முடியாத பல நினைவுகள் எனக்குள் இப்போது வரை இருக்கிறது. சுருக்கமாக சொல்லின் இந்த நிகழ்ச்சி மனதிற்கு ஒரு பெரிய மெடிசன். யாருக்கு எப்படியோ அதை பற்றித் தெரியாது. ஆனால், எனக்கு அப்படித்தான் அந்த நிகழ்ச்சி இருந்தது.
அதாவது வெளியுலக தொடர்புகள் எதுவும் இல்லாமல், எந்த ஒரு டெக்னாலஜியை பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு மன சம்பந்தமான விளையாட்டு தான் இது. அதேபோல இன்னொரு விடயம் என்னவெனில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது பலர் பிரபலமாக பேசப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அப்படியே காணாமல் போய்விடுவார்கள்" என்றார்.
அதுமட்டுமல்லாது "பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் சினிமாவில் பெரிய அளவு வாய்ப்பு கிடைத்துவிடும், வாழ்க்கை உச்சத்திற்கு மாறிவிடும் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், அதெல்லாம் சும்மா ஒரு பொய் தான்.
எது எவ்வாறாயினும் நம்மிடம் திறமை இருக்க வேண்டும். அதனுடன் இணைந்து அதற்கு ஏற்ற உழைப்பும் வேண்டும். அப்படி தான் நம்முடைய பயணம் இருப்பதோடு, அதற்கு பிறகு தான் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதில் வெற்றி பெற்றவர்கள் யாராவது நல்ல நிலையில் இருக்கிறார்களா? என்று நீங்களே யோசித்து சொல்லுங்கள்.
பிக்பாஸில் இருக்கும்போது தான் மக்களுடைய மரியாதையும் ஆதரவும் அங்கு உள்ளவர்களுக்கு அதிகமாக இருக்கும். வெளியே வந்த பிறகு அவர்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். பிக் பாஸில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கூட இதை மனதில் வைத்துக் கொண்டு கலந்து கொள்ள வேண்டும்" என்று பிக்பாஸ் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.
Listen News!