• Sep 20 2024

எல்லாமே ரிவேஞ்ச் கேம் தான், ஆரம்பமாகியது மூன்றாவது வாரத்திற்கான நாமினேஷன்- Bigg Boss Promo 1

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் வினுஜா, மாயா, பூர்ணிமா எல்லோரும் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மாயா, இங்க எல்லாமே ரிவேஞ்ச் கேம் தான் விஷ்ணு எல்லார் கிட்டையுமே சண்டை போட்டிருக்கிறார். அதனால விஷ்ணுவை எல்லோரும் நாமினேட் பண்ணுவாங்க என்று சொல்ல, பூர்ணிமா பிரதீப்புக்கும் அதுக்கான சந்தர்ப்பம் இருக்கு என்கின்றார்.

தொடர்ந்து நீங்க யாருக்கு ஓட்டுப் போடுவீங்க என்று கேட்க மாயா, நான் ரவீனாவுக்கும் விசித்திராவுக்கும் போவேன் என்கின்றார். அப்போது பூர்ணிமா தான் மணிக்கும் விசித்திராவுக்கும் போடுவேன் என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement