• Nov 17 2024

"இந்த டைம்ல தான் பீரியட்ஸ் வரும்- Saree கட்டி தலைகீழா நின்னு நடிச்ச லாயாவின் சுவாரஸியமான பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனத்தை பெற்று வரும் திரைப்படம் தான் பகாசூரன்.இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் லயாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அதிகம் பிரபலமாக உள்ள லயா, பகாசூரன் திரைப்படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகி உள்ளார்.

அதே போல முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் மத்தியில் அவரது நடிப்பு, சிறந்த பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த நிலையில், பிரபல சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகை லயா அளித்துள்ளார். அதில், பகாசூரன் திரைப்படம் குறித்து நிறைய கருத்துக்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.


அப்போது பகாசூரன் படத்தில் தலைகீழாக தொங்கும் காட்சிகளில் நடித்தது பற்றி பேசி இருந்த நடிகை லயா, "இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் தலைகீழா இப்படி தொங்கினது இல்ல அப்படின்னு சொல்லி தான் என்னை இம்ப்ரஸ் பண்ணி டைரக்டர் நடிக்க வச்சாரு. அந்த தலைகீழா தொங்குற சீன் இருபது நிமிஷம் வரை வரும்னு சொல்லி இருந்தாங்க. ஷூட் அன்னிக்கி காலையில சாப்பிட போகும் போது இந்த மாதிரி தலைகீழா நடிக்கணும், சாப்பிட வேணாம் கொஞ்சம் தண்ணி மட்டும் குடிச்சுக்கோங்கன்னு ஸ்டண்ட் மாஸ்டர் சொன்னாரு.

முதல், ரெண்டு தடவை தலைகீழா தொங்கி பண்ணும்போது கொஞ்சம் பயமா இருந்தது. ஏன்னா இடுப்புல இருந்து பெல்ட் எல்லாம் கொஞ்சம் உருவிடுச்சு. தலைகீழ தொங்கிட்டு டயலாக் வேற நான் பேசணும். பயத்தை எல்லாம் வேற கொண்டு வரணும். எனக்கு கயிறு வந்து விழுந்துடும்ன்னு ஒரு பயம். அதனால நான் நிஜமாவே அழுதுட்டேன். 27 டேக் போச்சு. 20 நிமிசத்துல முடியும்ன்னு சொன்ன விஷயம் கிட்டத்தட்ட ஒரு நாள் ஃபுல்லா 8 மணி நேரம் வரைக்கும் போச்சு.


அந்த நாள் ஃபுல்லா ஏதும் சாப்பிடல. BP அடிக்கடி செக் பண்ணாங்க. ஆனா அதுக்கு ஏத்த மாதிரியான Recognition இருந்தது. இது யாரும் செய்ய தயங்குற விஷயம், ரொம்ப தைரியமா பண்ணி இருக்கீங்கன்னு நிறைய பேரு பாராட்டினாங்க. இதுல பண்ண கேரக்டர்ங்குறத தாண்டி நடிகையா சாதிச்சது பெருமையா இருக்கு" என கூறினார்.

அதே போல தலைகீழாக தொங்கிய காட்சிகள் எடுத்த போது தனக்கு பீரியட்ஸ் வந்தது பற்றி பேசிய லயா, "இந்த டைம்ல தான் பீரியட்ஸ் வரும்ன்னு யாராலயும் கணிக்க முடியாது. எனக்கு அன்னைக்கு தான் கரெக்டா பீரியட்ஸ் வருது. அந்த ஷூட் இருக்கிறது கூட ஒரு நாள் முன்னாடி தான் தெரியுது. ஒருவேளை முன்னாடியே பிளான் பண்ணி இருந்ததுன்னா அனுமதி கேட்டுருக்கலாம். ஆனா அந்த நேரத்துல தான் அது  பண்ண போறாங்கன்னு தெரிஞ்சது.

அதுனால ஷூட்டிங்கை கேன்சல் பண்ணனும்னு வச்சுக்கோங்களேன், ஒரு 400 பேரோட சம்பளம் கெட்டுப் போகும். நாம திடீர்ன்னு சொல்லும்போது ஒரு ஷூட்டிங் கெட்டுப் போயிடும்" என தெரிவித்தார்.


Advertisement

Advertisement