• Nov 19 2024

மகள் இறந்து 12 ஆண்டுகள் .., புகைப்படம் பதிவிட்டு பாடகி சித்ரா போட்ட உருக்கமான பதிவு...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சின்னக் குயில் சித்ராவாக என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் பாடகியாக இருப்பவர் சித்ரா. பல்வேறு மொழிகளில் 25,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார்.

6 முறை தேசிய விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துள்ள சித்ரா அவர்கள் சினிமா துறைக்குள் நுழைந்து 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.

அண்மையில் கூட விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் அம்மா சென்டிமென்ட் கொண்ட ஒரு பாடலை பாடியிருந்தார்.பாடகி சித்ரா அவர்கள் விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகள் இருந்தார், பெயர் நந்தனா. 2011ம் ஆண்டு சித்ரா அவர்கள் துபாயில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.

அப்போது நீச்சல் குளத்தில் மூழ்கி அவரது மகள் உயிரிழந்தார். அன்றிலிருந்து சித்ரா தனது மகள் பெயரில் நிறைய குழந்தைகளுக்கு உதவிகள் செய்து வருகிறார்.

நேற்றோடு அவரது மகள் நினைவு நாள் வந்துள்ளது, மகளின் புகைப்படத்தை பதிவிட்டு பாடகி சித்ரா எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார். அவரது பதிவிற்கு ரசிகர்கள் அனைவரும் வருத்தமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement