• Nov 16 2024

அதுக்குள்ள ஆறு மாதம் ஆகிடுச்சு ரொம்ப முதிர்ச்சியடைந்த காதல்- பிக்பாஸ் அனிதா கூறிய குட் நியூஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான் அனிதா சம்பத். இவர் இதற்கு முதல் சன்டிவியில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்தவர். இதனைத் தொடர்ந்தே இந்த நிகழ்ச்சிய் பங்குபற்றி பிரபல்யமானார். இதனை அடுத்து தற்பொழுது பல விளம்பரங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் புதிய வீட்டுக்கு ஆறு மாத பிறந்தநாள் என உருக்கமான பதிவு ஒன்றினைப் போட்டுள்ளார். அதாவது “என் "housing board anitha" to "house owner Anitha Sampath" பயணம் அவ்வளவு எளிதானது இல்ல. நான் விடியற்காலையில எழுந்து செய்தி வாசிக்க போறப்ப வீட்ல எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க. நான் வேலை முடிச்சி லேட்டா வரும் போது எல்லாரும் தூங்கிடுவாங்க. அப்பா - அம்மா கூட நேரம் செலவிட முடியலயேனு அவ்ளோ கவலையா இருக்கும். ஆனாலும் சின்ன ஷோ, பெரிய ஷோனு பாக்காம, நேரம் காலம் பாக்காம நம்ம குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரனும், உண்மையா நேர்மையா நல்லா சம்பாதிக்கணும் என்கிறத மட்டுமே நினைச்சி உழைப்பேன்.


எனக்கு பக்க பலமா இருந்தது பிரபா. மணிக்கணக்கா phone-ல அப்றம் .... அப்றம்...னு கொஞ்சி சினுங்குற சினிமா காதல் இல்லை எங்க காதல். ஆரம்பத்தில இருந்தே ரொம்ப முதிர்ச்சியடைந்த காதல். ரெண்டு பேரும் மீடியா. ஆனா வேற வேற வேலைகள்.

எங்க குடும்பங்கள், எங்க முன்னேற்றம், சேமிப்பு, எங்க வேலை, எங்க கனவுகள், இதை பத்தி தான் அதிகம் பேசிப்போம். இதன் ஊடே எங்க அன்பு, பாசம், காமெடி, சிரிப்பு, காதல் எல்லாமும்... சைக்கிள் வாங்க முடியாம வடபழனி to கோவூர் நடந்தே போற பிரபா கதை.

நாப்கின் வாங்க காசில்லாம 2km பீரியட்ஸ் கரையோடயே நடந்து, ட்யூஷன் எடுக்கிற வீட்ல நாப்கின் வாங்கி மாத்துன என்னோட கதை. இப்படி எங்க சொந்த struggle stories தான் எங்களுக்கு மாத்தி மாத்தி inspirations.


எங்க 6 வருட காதல், ரெண்டு பேருடைய கனவையும் ஒரே கனவா ஆக்குச்சு. We chased our dreams together.. and this happened.. 29 & 30 வயசுல சொந்த வீடு. இவ்வளவு இளமைக்காலத்துல சொந்த வீடு வாங்குனது எங்க ரெண்டு பேரு குடும்பத்திலயும் இதுதான் முதல்முறை.

எங்க கனவு வீட்டுக்கு இன்று Half birthday, 6 months of happiness, Happy home. சொந்த வீடு இருக்குற partner-ஐ தேடுறத விட, மனசுக்கு புடிச்ச partner கூட சேர்ந்து உழைச்சி சொந்த வீடு வாங்குற சுகம் தான் அழகானது. Love u pappu” என்று அதில் தெரிவித்திருக்கிறார்.இவரின் இந்தப் பதிவு வைரலாகி வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement