ஏசிடிசி என்ற நிறுவனம் சார்பில் `மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது.
தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முறையாகச் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்ததால் அரங்கம் நிறைந்து, வெளியேஏராளமானோர் காத்துக் கிடந்தனர்.
அதில் பல ஆயிரம் பேர் டிக்கெட் இருந்தும் உள்ளே அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இது பெரிய சர்ச்சை ஆகி பலரும் ஏஆர் ரஹ்மான் மோசடி செய்துவிட்டார் எனக் கூறி வந்தனர். இதனால் ரஹ்மான் மீது எந்த தவறும் இல்லை, ஏற்பாட்டாளர்கள் சரியான ஏற்பாடுகளை செய்யாதது தான் காரணம் என ரஹ்மானுக்கு ஆதரவாகவும் பல பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் ரஹ்மான் நிகழ்ச்சிக்கு போலி டிக்கெட் விற்றவர்கள் உடன் விஜய் ஆண்டனியும் கூட்டு, இந்த சர்ச்சையை பெரிதாக்க அவர் சிலருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கிறார் என youtube சேனல் ஒன்றில் பெண் ஒருவர் பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
"அது முற்றிலும் பொய்யே" என குறிப்பிட்டு அந்த வீடியோ வெளியிட்ட சேனல் மீது வழக்கு தொடர் போவதாக விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!