கொரோனா லாக்டவுன் சமயத்தில் இன்ஸ்டாகிராமில் இஷ்டத்துக்கு கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசியதன் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இதையடுத்து இவருக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர் வட்டமும் பெரிதானது. பின்னர் சீரியல்களில் நடிக்கத்தொடங்கிய தர்ஷாவுக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.
இதையடுத்து சினிமாவிலும் கவர்ச்சி ரூட்டில் களமிறங்கிய தர்ஷா, ஓ மை கோஸ்ட் என்கிற படத்தில் கிளாமர் ரோலில் நடித்தார். இதில் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடித்திருந்தார் தர்ஷா. இதையடுத்து யோகிபாபு உடன் மெடிக்கல் மிராக்கிள் என்கிற நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா.
சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் தற்போது பிங்க் கலர் சுடிதாரில் அழகாய் ஜொலித்து ரசிகர்களை கட்டி இழுத்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றன.
Listen News!