• Nov 10 2024

'ஒரு முடிவோட தான் இது எல்லாம் பண்ணுறீங்க போல'-ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விமர்சித்து வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா . இவர் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இவர்கள் தாங்கள் பிரிய போவதாக அறிவித்திருந்தனர்.

இது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை அளித்தது. விவாகரத்திற்குப் பின் இருவரும் கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஐஸ்வர்யா டைரக்ஷனில் இறங்கியுள்ளார் . பயணி என்ற மியூசிக் வீடியோவை மூன்று மொழிகளில் இயக்கி, வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஐஸவர்யா அடிக்கடி ஒர்க்அவுட் செய்யும் போட்டோக்கள், வீடியோக்கள், ஜாக்கிங் மற்றும் யோகா செய்யும் போட்டோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது வெயிட் தூக்கும் வொர்க் அவுட் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எதுக்காக இவ்வளவு ரிஸ்க், பெல்ட் போடாமல் வெயிட் தூக்கதீங்க என ஐஸ்வர்யாவை எச்சரித்து வருகின்றனர். மேலும் சிலர் ஐஸ்வர்யா ஒரு முடிவோட தான் எல்லாம் பண்ணுவதாக பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/LcXVkYfdg0E


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement