சினிமாவில் நடிகைகள் எந்தளவிற்குப் பேசப்படுகின்றார்களோ அந்தளவிற்கு பேசப்படும் ஒரு தொலைக்காட்சிப் பிரபலமே சிவாங்கி. இவர் தனது முதல் திரைப்படப் பாடலாக “பசங்க” என்னும் தமிழ் திரைப்படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்த “அன்பாலே அழகாகும்..” என்னும் பாடலைப் பாடியிருந்தார்.
மேலும் இவர் பாடல் பாடியிருந்த இத்திரைப்படம் ஆனது சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் சீசன் 7 இல் பங்கேற்று முதல் ஆறு இடங்களில் ஒருவராக இடம் பெற்றார்.
சூப்பர் சிங்கரைப் போன்றே விஜய் டீவியில் ஒளிப்பரப்பாகும் 'குக்வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு என்றும் ஒரு தனி ரசிகர் படை உள்ளது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கு அதை அதிக அளவில் வரவேற்பு கிடைத்தது. இதன் மூன்றாவது சீசன் சமீபத்தில் ஒளிபரப்பாகி இருந்தது.
'குக்வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் சிலர் வரவேற்பை பெற்றனர். அதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒருவரான புகழ் அஜித்தின் 'வலிமை', விஜய்யின் 'பீஸ்ட்' ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தார்.
அதேபோன்றே சிவாங்கியும் குக்வித் நிகழ்ச்சியைத் தொடர்ந்து மென்மேலும் மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்தவகையில் சிவாங்கியும் வெள்ளித்திரையில் நுழைந்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இவ்வாறாக மக்கள் மத்தியில் பிரபலமான சிவாங்கி புகழுக்கு நிகராக சிவாங்கி தற்போது வேற லெவலில் பல நிகழ்ச்சிகளிலும் என்டர்டைன் செய்து வருகிறார்.
அதுமட்டுமல்லாது முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படத்திலும் சிவாங்கி நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக வெள்ளித்திரை, சின்னத்திரை என மாறி மாறிக் கலக்கி வருகின்ற சிவாங்கி சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.
அந்தவகையில் தற்போதும் ஓனம் பண்டிகையை முன்னிட்டு பாவாடை, தாவணி அணிந்து க்யூட்டாக போஸ் கொடுத்திருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது இடை தெரியும் வகையில் நடிகைகளுக்கே டாப் கொடுக்கும் வண்ணம் அதில் காணப்படுகின்றார் நம்ம சிவாங்கி. அத்தோடு அவங்க அணிந்திருக்கும் ஜிமிக்கி கம்மலும் அவங்க அழகை இன்னமும் மெருகூட்டி நிற்கின்றன.
Listen News!