• Nov 17 2024

“என்னுடையய தவறு தான் என்னை மாற்றி கொள்கிறேன்.. ” திடீரென கருத்து வெளியிட்ட அக்ஷய் குமார்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 பாலிவுட்டில் மிக முக்கியமான டாப் நடிகர்களில் அக்ஷய் குமாரும் ஒருவர். இருந்தாலும் மற்ற பாலிவுட் படங்களை போலவே இவரது படங்களும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன.

அக்ஷய் குமார் நடித்த பச்சன் பாண்டே, சாம்ராட் ப்ருத்விராஜ் போன்ற இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீசாகி, தோல்வியை சந்தித்தன. இதனால் அடுத்த படமான ரக்ஷா பந்தன் படத்தை அக்ஷய் மட்டுமின்றி பாலிவுட்டே அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது என்று தான் கூற வேண்டும்.

அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்திய ரக்ஷா பந்தன் படம் சகோதரத்துவத்தை உணர்த்தும் பண்டிகையான ரக்ஷா பந்தன் தினத்தன்றே சென்டிமென்டாக ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் இந்த படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.



இன்னும் சொல்லப் போனால் அக்ஷய்யின் முந்தைய படங்களான பச்சன் பாண்டே, சாம்ராட் ப்ருத்விராஜ் படங்கள் பெற்ற வசூலை விட குறைவான வசூலையே ரக்ஷா பந்தன் படம் பெற்றது. தோல்வி அடைந்ததுடன் கடும் விமர்சனத்திற்கும் ஆளானது.

எனினும் தற்போது அடுத்ததாக 'Cuttputlli' என்ற படத்தில் அக்ஷய் நடித்து வருகிறார்.மேலும்  இது தமிழில் விஷ்ணு விஷால், அமலாபால் நடித்து வெளிவந்த ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தனது படங்களின் தொடர் தோல்விகள் பற்றி அக்ஷய் குமார் ஓப்பனாக பேசிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.



அக்ஷய் கூறுகையில் என்னுடைய படங்கள் சரியாக போகவில்லை. அது எங்களின் தவறு, என்னுடைய தவறு. நான் என்னை மாற்றி கொள்கிறேன். ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு விட்டேன். இதற்கு என்னை தவிர யாரையும் நான் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை என்றார். மிக பக்குவமாக, யாரையும் குற்றம் சொல்லாமல் ஓப்பனாக பேசிய அக்ஷய் குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

'Cuttputlli' படம் பற்றி பேசிய அக்ஷய், இது க்ரைம் த்ரில்லர் படம்.மேலும்  இதில் நான் தொடர் கொலை சம்பவத்தில் ஈடுபடும் கொயாளியை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி ரோலில் நடிக்கிறேன் என்றார். இந்த படத்திற்கு'Mission Cinderella'என டைட்டில் வைக்கப்பட்டு, பிறகு மாற்றப்பட்டதாக சில தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இதனை டைரக்டர் ரஞ்சித் திவாரி மறுத்துள்ளார்.

மேலும் இந்த படம் ராட்சசன் படத்தின் ரீமேக் இல்லை. அதை தழுவி எடுக்கப்படும் படம். இதற்கு 'Mission Cinderella'என ஒரு போதும் நான் டைட்டில் வைக்கவே இல்லை. இந்த படத்தின் ஷுட்டிங் மிசோரி மற்றும் லண்டனில் எடுக்கப்பட உள்ளதாக டைரக்டர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement