பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜவான்.இந்தத் திரைப்படம் செப்டெம்பர் மாதம் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின்இசை வெளியீட்டுவிழா பிரமாண்டமாக சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் பிரபல இந்த விழாவில் அட்லி, நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலப் பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஷாருக்கான் சொந்தமாக தயாரித்துள்ளார்.
ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் ஜவான் படத்தில் நடித்துள்ளனர். கோலிவுட் ராக்ஸ்டார் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த நிகழ்வில் பேசிய அனிரூத், முதல் ஹிந்தி படமே ஷாருக்கான் உடன் இணைந்தது ஆண்டவன் பாக்கியம்,தமிழிலும் ஜவான் பயங்கர ஹிட்டடிக்கப் போகின்றது. இது ஹிந்தி படமல்ல இந்தியன் படம் என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!