• Sep 21 2024

அதை கள்ளத்தொடர்புனு சொல்ல முடியாது: மனம் திறந்து பேசிய கமலின் மாஜி மனைவி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் ஆந்தாலஜி தொடரான My Beautiful Wrinkles-ல் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கமல் ஹாசனின் முன்னாள் மனைவியாக சரிகா தாகூர்.

அதை பார்த்தவர்கள் 60 வயது பெண் 30 வயது பையனை காதலிப்பதா என்று பலரும் விமர்சிக்கிறார்கள். இது குறித்து சரிகா தெரிவித்திருப்பதாவது…

சவால்கள், பேசக் கூடாத விஷயங்கள் ஆகிய வார்த்தைகளை நான் கண்டுகொள்வதே இல்லை. ஓ மை காட், இந்த கதை இப்படி இருக்கே என்று நீங்களாக நினைத்தால் தான் அது சவால். ஆனால் அது அப்படி இல்லை. அது அழகான ஒரு விஷயத்தின் பகுதி.

மேலும் அந்த உறவை கள்ளத்தொடர்பு என்று சொல்லிவட முடியாது. தில்பர் குணால் மீது கொள்ளும் காதல், அவர் தில்பர் மீது காதல் வயப்படுவதை விவரிக்க முடியாது என்றார்.

சரிகா தைரியமாக நடித்த ஒரு கதைக்காக அவரை விமர்சிக்கிறார்கள். மேலும் முன்னதாக கொரோனா தொற்று பிரச்சனையால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டபோது பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதாக சரிகா குறிப்பிட்டார்.

https://www.youtube.com/embed/wvRxMVKsd6o

Advertisement

Advertisement