• Sep 21 2024

மனிதர் உணர இது மனிதக் காதல் அல்ல.. காதலர் தினத்தில் கமலின் திடீர்ப் பதிவு.. உற்சாகத்தில் இளைஞர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

உலகம் முழுவதும் இன்றைய தினம் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனால் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களுடைய காதலர் தின வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதற்கு கமல் ஹாசனும் விதி விலக்கானவர் அல்ல.


அதாவது "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலே அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது" என குணா படத்திலும், புன்னகை மன்னன் படத்தில் இடம்பெற்ற "என்ன சத்தம் இந்த நேரம்" பாடலில் கமலின் காதல் லீலைகளும், தேவதாசாகவே வாழ்வே மாயம் படத்தில் காதலுக்காக உயிரை கொடுக்கும் கதாபாத்திரம் என கமல்ஹாசன் நடிக்காத காதல் கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்ல முடியும்.


அந்தளவிற்கு எண்ணற்ற காதல் படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் காதலிக்கு முத்தம் தருவதில் தொடங்கி, ரொமான்ஸ் காட்சிகளில் கமலை அடித்துக் கொள்ள ஆளே தமிழ் சினிமாவில் இல்லை என சொல்லும் அளவுக்கு காதல் நாயகனாக பல ஆண்டுகளாக வலம் வரும் கமல் தற்போது காதலர் தினத்துக்கு வாழ்த்து சொல்லி இருப்பது இளம் காதலர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.


அதில் அவர் "சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம்." என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் காதலர் தினத்தை கொண்டாடுவோம் என பதிவிட்டுள்ள கமலின் ட்வீட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.


Advertisement

Advertisement