• Sep 20 2024

எங்க வீட்டுக் கடைக்குட்டி மட்டும் இல்லை- சீரியல் முடிந்தாலும் ஒன்றாக ஊர் சுற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் அண்ணன் -தம்பிகளின் பாசம், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி பல வருடங்களாக சூப்பர் ஹிட்டாக ஓடி வந்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், லாவண்யா எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

சீரியலின் கதைப்படி தற்போது தன்னுடைய இரண்டாவது மருமகன் பிரஷாந்தால் கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட நிலையில், அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ஜனார்த்தனர் குணமடைந்துள்ளார். அவரை கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜீவா மற்றும் கதிரை நீதிமன்றம் விடுவித்துள்ள நிலையில் குடும்பத்தினர் அனைவரும் மீண்டும் இணைந்து விட்டனர்.


அத்தோடு விரைவில் சீரியல் முடிவுக்கும் வரவுள்ளது. இறுதி நாள் ஷுட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பனவும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


இந்த நிலையில் தற்பொழுது எல்லோரும் இணைந்து டூர் சென்றுள்ளனர். இது குறித்த புகைப்படங்களை ஹேமா தன்னுடைய தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவை வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement