• Sep 20 2024

சீரியலில் மட்டும் தான் நாங்க அப்பிடி நிஜத்தில் வேற மாதிரி- மாடர்ன் உடையில் மாஸ் காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் யாரும் எதிர்பாராத விதமாக தற்பொழுது திருப்பம் நடந்துள்ளது.


அதாவது தனம் மார்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்.இந்த விடயம் மீனாவுக்கு மட்டுமே தெரிந்திருக்கின்றது.வேறு யாருக்கும் இந்த விடயம் தெரியாது. தனமும் யாரிடமும் சொல்லாமல் மௌனம் காத்து வருகின்றார்.


ஐஸ்வர்யாவின் வளைகாப்பு முடிந்தவுடன் இந்த விஷயத்தை எல்லோரிடமும் சொல்லப்போவதாக தனம் சொல்லியிருந்தார். ஆனால் எல்லோருடைய சந்தோஷத்தையும் கெடுக்க வேண்டாம் என்ற காரணத்தினால் தனம் சொல்வதற்கு தயங்கி நிற்கின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றனது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.


இது ஒரு புறம் இருக்க இந்த சீரியலில் மூர்த்தி என்னும் காதாப்பாத்திரத்தில் நடிகர் ஸ்டாலின் நடித்து வருகின்றார்.சீரியலில் வேட்டி சட்டையுடன் திரியும் இவர் தற்பொழுது மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement