• Nov 10 2024

உன்னுடன் இல்லாதது சோகமாக இருக்கின்றது- நடிகை ஜான்வி கபூர் பிரபல நடிகரின் காதல் வலையில் சிக்கி விட்டாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் திரையுலகில் படுபிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜான்வி கபூர். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகள் என்பதும் யாவரும் அறிந்ததே. 


 சமீபத்தில் இவர் நடித்த 'குட்லக் ஜெர்ரி' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.


இந்த நிலையில்  ஜான்வி கபூர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் ஹாப்பி Monday... தன்னுடைய 'Mrand MrsMahi' என்கிற திரைப்படத்திற்காக அவுட்டோர் செல்ல உள்ளதாகவும் அதற்காக தன்னை அனைவரும் வாழ்த்த வேண்டும் என சில புகைப்படங்களை வெளியிட்டு பதிவு ஒன்றை போட்டிருந்தார்

.

மேலும் இவர் வெளியிட்ட புகைப்படத்தில் துளியும் கார்ச்சியும், மேக்கப்பும் இன்றி, வெள்ளை நிற உடையில்... தன்னுடைய பால் வண்ண அழகை வெளிப்படுத்தி ரசிகர்களை பிரமிக்க வைத்தார். இவரது இந்த புகைப்படங்களுக்கு ஒரு பக்கம் லைக்குகள் குவிந்த நிலையில், ஜான்வியின் இந்த பதிவுக்கு ஓர்ஹான் அவத்ரமாம்னி என்னும் பிரபலம் நான் உங்களுடன் இல்லாததால் எனக்கு இது ஒரு சோகமான திங்கள் கிழமை என ரிப்ளே செய்துள்ளார்."


ஏற்கனவே ஜான்வியும் -  ஓர்ஹான் அவத்ரமணியும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்தாலும், இருவருமே இதுகுறித்து வெளிப்படையாக தெரிவித்தது இல்லை. மேலும் இந்த பதிவால், உண்மையில் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? என ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement