• Sep 20 2024

இது தல - தளபதி பொங்கல்-ரசிகர்களோடு துணிவு, வாரிசு படங்களை பார்த்த த்ரிஷா- வேற லெவல் கொண்டாட்டம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் முன்னணி நடிகை தான் த்ரிஷா.இவர் முன்னணி நடிகர்களான இவர் விஜய், அஜித் இருவருடனும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். அத்தோடு இவர்கள் இருவரின் ரசிகையாகவும் வலம் வருகின்றார்.

இந்த நிலையில் இவர் இன்று வெளியாகி இருக்கும் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய 2 படங்களின் முதல் ஷோவை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்துள்ளார்.சென்னையில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் இந்த இரண்டு படங்களையும் பார்த்துள்ளார் .


அவருடன் ஏஜிஎஸ் நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தியும் சேர்ந்து இரு படங்களில் FDFS ஷோவை பார்த்து ரசித்துள்ளார். இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.இதில் அர்ச்சனா கல்பாத்தி விஜய்யின் பிகில் படத்தை தயாரித்தவர் ஆவார்.


 விஜய்யின் தீவிர ரசிகையான அவர் வாரிசு என்கிற டைட்டில் இடம்பெற்றுள்ள டீசர்ட்டை அணிந்து வந்து படத்தை பார்த்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள த்ரிஷா, இது தல - தளபதி பொங்கல் என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement