• Sep 20 2024

கண்ணனுடன் ஷுட்டிங் கடைசி நாள் இது தான்- சோகமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் 4 வருடத்திற்கு மேலாக சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்பொழுது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சீரியலின் கதைப்படி தன்னுடைய அப்பா ஜனார்த்தனன் ஹாஸ்பிட்டலில் இருப்பதற்கு காரணம் கதிர் தான் என்பதை பிரசாந்த் சொன்னதை நம்பிக் கொண்டிருக்கின்றார் மீனா.

இதனால் மீனாவுக்கு எப்போது உண்மை தெரியவரும், எப்போது மீனா தன்னுடைய குடும்பத்தினருடன் இணையப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது. அத்தோடு இந்த சீரியல் முடிவு கட்டத்தை நோக்கி நகர்ந்து செல்கின்றது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் ரோலில் நடித்த சரவணவிக்ரம் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து கலக்கிக் கொண்டிருக்கின்றார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி நாள் எடுத்த வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

இதனை அடுத்து தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனின் மனைவி ஐஸ்வர்யா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் விஜே தீபிகா சரவணனுடன் இறுதி நாளில் எடுத்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement