• Sep 20 2024

தவறான வார்த்தை தான்... விருமன் பட பாடல் வரிகளுக்கு மன்னிப்பு கேட்ட பாடலாசிரியர் ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தி - அதிதி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான்'விருமன்'. திரையரங்குகளில் சில படங்கள் நான்கு நாட்கள் கூட தாக்குப்பிடிக்க கஷ்டப்பட்டு வரும் நிலையில், விருமான் திரைப்படம் வெற்றிகரமாக இன்னும் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.மேலும்  இந்த படத்தில் மிகப்பெரிய வெற்றிக்கு இயக்குநர் முத்தையாவிற்கு எந்த அளவிற்கு பங்கு உள்ளதோ அதே அளவிலான பங்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் உள்ளது என்று தான் கூற வேண்டும்.

 பொதுவாக கார்த்தி  - யுவன் கூட்டணி என்றாலே சூப்பர் ஹிட், என சொல்லும் அளவுக்கு இதுவரை இவர்கள் இணைந்து பணியாற்றிய திரைப்படங்களான பருத்திவீரன், நான் மகான் அல்ல, பையா ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.அதே போல் இவர்கள் இருவரும் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றியுள்ள விருமன் படத்தின் பாடல்கள் அனைத்துக்கும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

எனினும் குறிப்பாக அதில் இடம்பெற்ற கஞ்சா பூ கண்ணால மற்றும் மதுர வீரன் ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகின்றன. இதனிடையே இதில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூ கண்ணால பாடலை விமர்சித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதல் பலர் தொடர்ந்து விமர்சித்து வந்ததையும் பார்க்க கூடியதாக உள்ளது.. 

 இந்த நிலையில், 'கஞ்சா பூ கண்ணால' பாடல் வரிகளுக்காக தான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் மணிமாறன் கூறியுள்ளார்.

 எனினும் இதுகுறித்து பிரபல தொலைக்காட்சிக்கு இவர் அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, மயக்கும் தன்மைக்காக பெண்ணின் கண்களை கஞ்சா பூவுடன் ஒப்பிட்டதாகவும், கஞ்சாவுடன் ஒப்பிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.

 மேலும், பாடலின் வரிகள் கற்பனைக்காக உவமைப்படுத்தப்பட்டது என்று கூறிய அவர், தான் எழுதியது தவறான வார்த்தைதான் என்றும் கூறினார். இதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement