துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களுக்காக கவிஞர் வைரமுத்து கண்ணீர்மல்க உருக்கமான கவிதை ஒன்றை எழுதி உள்ளார்.
அந்தவகையில் துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ந் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு அடுக்குமாடி கட்டிடங்களும், வணிக வளாகங்களும் இடிந்து தரைமட்டம் ஆகின. அதுமட்டுமின்றி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உலககினையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நிலநடுக்கத்தால் சீர்குலைந்து போன துருக்கிக்கு உலக நாடுகள் தங்களது உதவிக்கரங்களை நீட்டி வருகின்றன. குறிப்பாக இந்தியா முதல் நாடாக நேற்று துருக்கிக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தது.
இதையடுத்து ஆஸ்திரேலியா நியூசிலாந்து உள்பட ஏராளமான நாடுகள் துருக்கி மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றன.
துருக்கியை போல் சிரியாவும், இந்த நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. ஏற்கனவே உள்நாட்டு போரால் உருகுலைந்து போன சிரியா அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமும், அதனால் ஏற்பட்ட சேதங்களும் அந்நாட்டு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி நாடு குறித்து கண்ணீர் வர வைக்கும் கவிதை ஒன்றை எழுதி இருக்கிறார்.
Listen News!