திரைப்பட இயக்குநரும் குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து நேற்று காலை சென்னையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். பின்னர் சென்னையில் அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக மாரிமுத்துவின் உடல் வைக்கப்பட்டது.பின்னர் இன்று காலை அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள பசுமலைதேரிக்கு அதிகாலை 6:00 மணி அளவில் அவரது உடல் கொண்டுவரப்பட்டது.
நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் விமல், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள், உறவினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர்.அவரது இறுதி ஊர்வலத்தில் அந்த கிராமத்தில் உள்ள, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே கலந்து கொண்டனர்.
அத்தோடு சில மணித்தியாலத்திற்கு முதல் இவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.அவரது இறப்பு இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளதாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க இவரைப் பிரபல்யமாக்கிய எதிர்நீச்சல் சீரியலில் இனி குணசேகரனாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது.
அதன்படி இதில் குணசேகரனாக நடிக்க நடிகர் வேல ராமமூர்த்தியிடம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இப்படியான நிலையில் இது பற்றி முதன்முறையாக வேல ராமமூர்த்தி பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது,மாரிமுத்துவின் மறைவிக்கு பின்னர் சேனல் தரப்பிலிருந்த அந்த கேரக்டரில் நடிக்கச் சொல்லிக் கேட்து உண்மை தான்.
ஆனால் இப்போ சினிமாவில் நான் பிஸியாக இருக்கின்றேன்.இப்பவும் ஒரு படப்பிடிப்பில் தான் இருக்கிறேன். சீரியலுக்காக நேரம் கொடுக்க முடியுமா என்று தெரியல.இந்த மாதம் 20ம் தேதிக்கு மேல் தான் சினிமா ஷுட்டிங் முடியுது. அந்த சீரியலில் நடிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கல என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!