• Sep 20 2024

இணையத்தைக் கலக்கும் இவானா... லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் வெளியான 'லவ் டுடே' படத்தின் மூலமாக பல இளைஞர்கள் மனதைக் கொள்ளை கொண்டவர் நடிகை இவனா. கோமாளி பட பிரதீப் குமார் இயக்கியிருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார்.


இந்த திரைப்படத்தினைத் தொடர்ந்து இவானாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இவர் தமிழில் இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான 'நாச்சியார்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.


இது தவிர மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் லவ்டுடே திரைப்படமே இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது. சமீபத்தில் கூட இவர் நடிப்பில் எல்.ஜி.எம் திரைப்படம் வெளியாகி இருக்கின்றது.


இந்நிலையில் சேலையணித்து இவானா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement