தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக விளங்குபவர் யோகி பாபு. வடிவேலு, சந்தானம் போன்ற காமெடியர்களை பின்னுக்கு தள்ளி சிறந்த காமெடி நடிகர் என்கிற இடத்தை பிடித்தவர்.
தமிழ் சினிமாவில் சரியான நேரத்தில் காமெடியால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் என்ற பெருமை இவரையே சாரும். அஜித், விஜய் என முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படத்தில் காமெடியனாக மட்டும் நடிக்காமல் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தற்பொழுது ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் நாளைய தினம் வெளியாகவுள்ளது. இது தவிர அட்லி இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்திலும் நடித்து வருகின்றார்.நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் ஆன்மீகத்திலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.யோகி பாபுவுக்கு முருகர் என்றால் அவ்வளவு இஷ்டம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகே இருக்கும் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் சிறுவாபுரி முருகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து முடித்த பின்னர், புரோகிதர் ஒருவருக்கு கை கொடுக்கும் போது, அவர் யோகி பாபுவின் கையை தொடாமல் ஆசி வழங்கியது போல் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ படு வைரலாக பரவியது. இதை பார்த்த ரசிகர்கள் சிலர் தீண்டாமை கொடுமை யோகி பாபுவுக்கு நடந்து விட்டதாக கூறிவந்த நிலையில் இந்த வீடியோ குறித்து தற்போது யோகி பாபு விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சிறுவாபுரி கோவிலுக்கு 12 ஆண்டுகளுக்கும் மேலாக நான் சென்றுகொண்டிருக்கிறேன். அப்போதிருந்தே அந்த குருக்களை எனக்கு தெரியும்." "வேண்டுமென்றே யாரோ இப்படி வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். அது பழைய வீடியோ. இதில் சாதி பார்க்க வேண்டாம், குருக்களால் தீண்டாமை எதுவும் நடைபெறவில்லை" என தெரிவித்துள்ளார்.
Listen News!