விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11ம் தேதி ரிலீஸாகிறது.இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் வாரிசு ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.முன்னதாக டிசம்பர் 24ம் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.மேலும் இதில் கலந்துகொண்ட விஜய்யின் ஹேர் ஸ்டைல், லுக் குறித்து ஊடகவியலாளரும் இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்து இருந்தார்.
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. அத்தோடு வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.அத்தோடு இரு தினங்களுக்கு முன்னர் ரிலீஸான வாரிசு ட்ரெய்லர் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அத்தோடு இதில் கலந்துகொண்ட விஜய் ரொம்பவே சிம்பிளான லுக்கிலும், சரியாக மேக்கப் செய்யாத ஹேர் ஸ்டைலுடனும் வந்திருந்தார்.
வாரிசு இசை வெளியீட்டு விழா ஜனவரி 1ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பானது. அப்போது அதனை பார்த்துவிட்டு விஜய்யின் மேனரிசம், ஹேர் ஸ்டைல், லுக் ஆகியவைகள் பற்றி தனது முகநூலில் கருத்து தெரிவித்து இருந்தார் ஜேம்ஸ் வசந்தன்.
விஜய் தனது தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழா மேடைக்கேற்ற உடை அணிந்திருக்கலாம் என்று தோன்றியது. அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம். அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள். இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன் என பதிவிட்டு இருந்தார்.
அத்தோடு, "ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர்மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது. அத்தோடு தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பொதுமேடையாயிற்றே" என மேலும் சில கருத்துகளை முன் வைத்திருந்தார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த்ப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இவ்வாறுஇருக்கையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜேம்ஸ் வசந்தன் இதுகுறித்து பேசியுள்ளார். இந்த முகநூல் பதிவு பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "அவ்வளவு பெரிய நடிகரை என்னைத் தவிர யாரும் விமர்சிக்க மாட்டார்கள் எனத் தெரியும். ஆனால் அதை சொல்லியாக வேண்டும் என்று தோன்றியதால்தான் பதிவிட்டேன். பெரிய நடிகரை விமர்சித்தால் அவரின் ரசிகர்கள் விமர்சிப்பார்கள் என தெரியும். ஆனால் ஒரு மூத்த ஊடகவியலாளராக என் பொறுப்பு காரணமாக நான் அப்படி எழுதினேன்" என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த பதிலும் வைரலாகி வருகிறது.
Listen News!