• Sep 20 2024

'என் வாழ்க்கை முழுக்க அவருடன் தான்' …அதிதி ராவ் மீதான காதலை உறுதி செய்த சித்தார்த்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யன்ஷா கெளசிக், முனீஷ்காந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெள்ளிக்கிழமை டக்கர். திரைப்படம் வெளியானது.

இத்திரைத்தின் முதன் மூலம் சித்தார்த் அதிரடி ஆக்ஷ்ன் எடுத்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவிவருகிறது. தெலுங்கில் மகாசமுத்திரம் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அந்த படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், டக்கர் பட புரமோட் செய்யும் விதமாக ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் சித்தார்த் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் யாருடன் பாடிக்கொண்டே இருக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சித்தார்த் என்னுடைய ஊரில் உள்ள அதிதி தேவ பவா உடன் என்று கூறினார்.

இதன் மூலம் அதிதி ராவை காதலிப்பதை மறைமுகமாக சித்தார்த் உறுதிப்படுத்தி இருப்பதாக அவர் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement