விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் ரியாலிட்ரி ஷோக்களில் ஒன்று தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மாகபா தொகுத்து வழங்கி வருகின்றனர். நிகழ்ச்சியில், சித்ரா, உன்னி கிருஷ்ணன், தமன், ஸ்வேதா மோகன் உள்ளிட்டவர்கள் நடுவர்களாக கலக்கி வருகின்றனர்.
இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் 90ஸ் கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் சுற்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதில் அஜித்தின் மீனாட்சி மீனாட்சி பாடலை, கோகுல் என்பவர் பாடி இருந்தார். இந்த பாடலுக்கு அனைவரும் குஷியாக இருந்ததோடு கோகுலுக்கு கோல்டன் பஸ்ஸரை நடிகர் அப்பாஸ் ஓடி வந்து கொடுத்தார்.
பின் தொடர்ந்து பேசிய அப்பாஸ், 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் ஸ்டூடியோவிற்கு வந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த சின்ன வயதில் போட்டியாளர்கள் அனைவரும் இவ்வளவு நம்பிக்கையுடன் உள்ளதற்கு பாராட்டு தெரிவித்தார்.
தான் இவர்களின் வயதில் அந்த அளவிற்கு கான்பிடன்சுடன் இல்லை என்றும் இவர்கள் அனைவரும் இந்த அளவிற்கு நம்பிக்கையுடன் இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறினார்.அத்தோடு இவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஜெயிப்பார்கள் என்றும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!