• Sep 21 2024

''அந்த விஷயத்தை10 முறை ட்ரை பண்ணேன்''... நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் சொன்ன சீக்ரெட்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இதுவரை நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். இவற்றில் நானும் ரௌடிதான் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி அவர் அனைவராலும் அறியப்படும் இயக்குநராக மாறினார். டார்க் காமெடி ஜானரில் வெளியான அந்தப் படம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது.

 நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் பணியாற்றும்போதுதான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. பல வருடங்கள் லிவிங் டூ கெதராக இருந்தவர்கள் கடந்த ஆண்டு மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

 திருமணம் முடிந்த கையோடு, அஜித்தின் 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. லைகா நிறுவனம் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் கூறிய கதையின் இரண்டாம் பாதி லைகாவுக்கு பிடிக்காமல் போக அந்தப் படத்திலிருந்து வெளியேறினார் விக்னேஷ் சிவன். இதனையடுத்து ஏகே 62வை மகிழ் திருமேனி இயக்குவதற்கு கமிட்டாகியிருக்கிறார். படம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகாமல் இருக்கிறது.

 இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அதில் நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாரா அழுதுகொண்டே சாலையில் நடந்துவரும் சீன் குறித்து பேசினார். 

அதற்காக நாங்கள் பயங்கரமாக கஷ்டப்பட்டோம் என்றும் பெருமிதத்துடன் கூறினார்.அந்த சீன் குறித்து பேசிய விக்னேஷ் சிவன், "நயன்தாரா அழுதுகொண்டே வரும் ஷாட்டை பத்து முறை ட்ரை பண்ணோம். நானும் நயனும் ஒரு ஆட்டோவில் போவோம். எங்கள் கேமராமேன் எங்களுக்கு முன்பாகவே சென்று ஒரு இடத்தை செலக்ட் செய்துவிடுவார். அவர் ஓகே சொன்னதும் நயன் ஆட்டோவில் இறங்கியவுடன் அழுதுகொண்டே நடக்க வேண்டும். அதற்கு ஒரு நிமிடம்தான் டைம் இருக்கும்.

 முதல் தடவை அந்த சீனை எடுக்கும்போது அங்கு இருந்த மக்களில் ஒருவர் நயனை பார்த்து அவரது அருகிலேயே வந்துவிட்டு டேய் நயன்தாராடா நயன்தாராடா என சொல்லிக்கொண்டே அவர் கூடவே வந்தார். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத நயன்; நான் கட் சொல்லும்வரை நடித்துக்கொண்டே வந்தார்.

அப்போது இன்னொருவர் நயன்தாரா அழுவதை பார்த்து, டேய் இங்க பாருடா அழுகுறாங்க. என்னாச்சு மேடம் என கேட்டும்விட்டார். இப்படி மொத்தம் பத்து முறை அந்த சீனை எடுக்க ட்ரை பண்ணோம். அதற்கு பிறகுதான் அந்த சீன் ஓகே ஆனது" என்றார்.

Advertisement

Advertisement