பீஸ்ட் படத்திற்கு பின்னர் இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தின் மூலம் எப்படியாவது கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என தீயாய் வேலை செய்து வருகிறாராம் நெல்சன்.
ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சுனில், மோகன்லால், ஷிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், யோகிபாபு, வஸந்த் ரவி, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வழக்கம்போல் நெல்சன் மற்றும் அனிரூத்தின் கலாட்டாவான உரையாடல்களுடன் கூடிய இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!