• Sep 20 2024

பாக்ஸ் ஆபிஸை மிரட்டும் 'ஜெயிலர்'- வெளியாகிய இத்தனை நாட்களில் செய்த மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

குறிப்பாக வசூலில் முதல் நாளில் இருந்தே சாதனை படைத்து வருகிறது. இப்படம் வெளிவந்த முதல் நாள் உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்திருந்தது. மேலும் முதல் வாரத்திலேயே 375 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்பட்டது.


இதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வசூலில் அள்ளிக் குவித்து வந்த இந்தத் திரைப்படம் 13 நாட்களில் எவ்வளவு வசூலித்த என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயிலர் வெளிவந்த 13 நாட்களில் உலகளவில் ரூ. 525 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 


இதன் மூலம் கடந்தாண்டு வெளியாகி ரூ.500 கோடி வசூலித்த பொன்னியின் செல்வன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை ஜெயிலர் முறியடித்து உள்ளது. அதே போல் 'விக்ரம்' படத்தின் வசூலையும் 10 நாட்களில் முறியடித்து கெத்து காட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement