மலையாள திரையுலகில் 25 வருடங்களுக்கு மேலாக முன்னணி வேடங்களில் நடித்து பிரபலமானவர் விநாயகன். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது இவரின் தனி சிறப்பு என கூறலாம். மலையாளம் மட்டும் இன்றி தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'திமிரு' படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் அடியாளாக நடித்திருப்பார். இதை தொடர்ந்து தனுஷின் மரியான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் .தமிழில் இவரின் நடிப்புக்கு வரவேற்பு இருந்த போதிலும் மலையாள படங்களில் பிசியாக நடித்து வந்ததால் சுமார் 11 வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்தார்.
ஆனால் நீண்ட இடைவெளிக்கு பின்னர், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'ஜெயிலர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இப்படத்தின் மூலம் ரசிகர்களின் ஆதரவையும் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் மது அருந்தியிருந்தாரா என்பதை அறிய ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!