• Nov 17 2024

“ஜெயிலர் வசூல் தமன்னாவால் தான் வரப்போகிறது”... டுவீட் போட்ட ப்ளூ சட்டை! - கடுப்பாகிய ரஜனி ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படம் ரஜினிக்கு மெகா ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அமைய வேண்டும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். தர்பார், அண்ணாத்த என அடுத்தடுத்து தோல்வியில் சிக்கிய ரஜினிக்கு, ஜெயிலர் தான் இப்போதைய ஒரே ஆறுதல்.

இதனால், ஜெயிலர் படத்திற்காக சன் பிக்சர்ஸ் தரப்பில் தாறுமாறாக ப்ரொமோஷன் செய்யப்படுகிறது. 

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் வசூலில் முக்கால் பங்கு  தமன்னாவால்தான் வரப்போகிறது என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு அதகளம் செய்துள்ளார். "சூப்பர் சூரியன்' தமன்னாவின் ஜெயிலர். 10 ஆம் தேதி முதல்" எனவும் கேப்ஷன் கொடுத்துள்ள அவர், காவாலா சாங் 100 மில்லியன் பார்வைகளை கடந்த போஸ்டரை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதாவது காவாலா பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் தமன்னாவுக்காகவே ஜெயிலர் படத்தை பார்க்க ரசிகர்கள் படையெடுப்பார்கள் என சொல்லாமல் சொல்லியுள்ளார்.

ஆகமொத்தம் ஜெயிலர், சூப்பர் ஸ்டார் ரஜினியின் படமாக இல்லாமல், தமன்னாவின் மூவியாக மாறிவிட்டதாக ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் வழக்கம் போல ப்ளூ சட்டை மாறனை வச்சு செய்து வருகின்றனர்.

நிச்சயமாக ஜெயிலர் திரைப்படம் ரஜினிக்கு செம்ம மாஸ் கம்பேக் கொடுக்கும் எனவும், அது பொறுக்காமல் ப்ளூ சட்டை மாறன் இப்படி தொடர்ந்து ட்வீட் போடுவதாகவும் பொளந்துகட்டி வருகின்றனர்.

ரஜினி ரசிகர்களின் கமெண்ட்ஸ்களுக்கு ப்ளூ சட்டை மாறனும் பதில் கொடுத்து வருவது, டிவிட்டரையே சூடாக்கியுள்ளது. ப்ளூ சட்டை மாறனின் நெகட்டிவ் ட்ரோல்கள் ரஜினி ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. 

Advertisement

Advertisement