நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர்'.
இப்படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார்,தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில் எனப் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஜெயிலர் படம் ரஜினி, மற்றும் நெல்சன் இருவருக்குமே சிறந்த கம்பேக் கொடுத்துள்ளது. இதனால் படக்குழுவினர் செம குஷியில் உள்ளனர்.
பாராட்டுக்களையும், பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகின்ற இப்படமானது வசூலையும் வாரிக் குவித்து வருகின்றது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியான நாளிலிருந்து இன்றுவரை உலகளவில் ரூ. 540 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே ரூ. 163 கொடுக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!