• Nov 14 2024

முதன் முதலாக தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்ட ஜான்கொக்கேன்- அடடே இவ்வளவு கியூட்டாக இருக்கிறாங்களே...

stella / 1 year ago

Advertisement

Listen News!

மாடலாவும் இருந்து வந்த பூஜா, தன்னுடன் பணியாற்றிய VJ Craig என்பவரை கடந்த 2010- ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சின்னத்திரையில் அவ்வப்போது தலை காட்டி வந்த பூஜா, திடீர் என கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.


இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தி வந்த பூஜா, மலையாள நடிகரும்... ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான, ஜான் கொக்கேன் என்பவருடன் டேட்டிங் செய்து வந்தார். 


இதை தொடர்ந்து இவர்கள் இருவரும், கடந்த 2019 ஆம் ஆண்டு மிகவும் எளிமையான முறையில், திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர், இருவரும் ஒன்றாக ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவையே ஸ்தம்பிக்க வைத்தனர்.


இந்த நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு கியான் கொக்கேன் என வித்தியாசமாக பெயர் வைத்துள்ளதாக அறிவித்திருந்தார். இப்படியான நிலையில் ஜான் கொக்கேன் முதன் முதலாக தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement