இந்திய பாடகர்களில் தனித்துவமான ஒரு இடத்தை பிடித்த முக்கியமான ஒரு பாடகர் என்று எஸ்.பி பாலசுப்பிரமணியத்தை சொல்லலாம். இந்திய அளவிலேயே அவரது காலகட்டத்தில் அவருக்கு நிகரான இன்னொரு பாடகர் இந்திய சினிமாவில் இருந்தாரா? என்பது சந்தேகமே. அந்த அளவிற்கு அனைத்து மொழிகளிலும் எக்கச்சக்கமான பாடல்களை பாடியுள்ளார் எஸ்.பி.பி.
முக்கியமாக ரஜினியின் பல படங்களுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான் பாடல் பாடுவார் அதிலும் படையப்பா, முத்து, அருணாச்சலம், அண்ணாத்தே என பல படங்களில் ரஜினியின் முதல் பாடலை எஸ்.பி.பி தான் பாடுவார். மற்ற பாடகர்களைப் போல் அல்லாமல் ஒவ்வொரு பாடலையும் மிகவும் ரசித்து பாடக்கூடியவர் எஸ்.பி.பி அவரது பாடல்களை கேட்கும் பொழுது அந்த விஷயங்கள் நமக்குத் தெரியும்.
சாதாரணமாக பாடல்களை பாடுவது மட்டுமில்லாமல் அதில் சில உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார் எஸ்.பி.பி. உதாரணமாக கூற வேண்டும் என்றால் நிறைய பாடல்களில் அவற்றின் வரிகளுக்கு நடுவே அவர் சிரிப்பது போன்ற விஷயங்களை செய்வார்.அப்பொழுது ஒரு பேட்டியில் எஸ்.பி.பியிடம் இந்த மாதிரியாக சிரிப்பு வருவதற்கு எதை நினைத்துக் கொள்வீர்கள் என்று கேட்டிருந்தனர். அதற்கு பதில் அளித்த எஸ்.பி.பி அழகான பெண்கள் கதாநாயகியாக இருக்கும் பட்சத்தில் அவர்களை நினைத்து சிரிப்பேன்.
ஆனால் என்னை விட இந்த விஷயத்தை மிகவும் சிறப்பாக செய்பவர் ஒருவர் தமிழ் சினிமாவில் உள்ளார். அவர்தான் பாடகி ஜானகி, ஜானகி பாடும் பல பாடல்களில் என்னை விட சிறப்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருப்பார். அதை ஜானகியை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என எஸ்.பி.பி தனது பேட்டியில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!