• Sep 21 2024

கரிகாலனுடன் ரொமான்ஸ் பண்ணும் ஜனனி... என்னடாப்பா 'எதிர்நீச்சல்' சீரியலில் ஜோடியை மாத்திட்டாங்களா..? கலாய்க்கும் ரசிகரக்ள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றதது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


அந்தவகையில் இந்த சீரியலில் நடிகைகள் மதுமிதா, கனிகா, தேவதர்ஷினி, ஹரிப்பிரியா, சத்ய பிரியா, இயக்குநர் மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியல்  அனைத்து தரப்பு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


அதுமட்டுமல்லாது டிஆர்பி ரேட்டிங்கில் யாரும் அசைக்க முடியாத சாதனைப் படைத்த எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார். இந்நிலையில் ஜனனி தற்போது கரிகாலனுடன் இணைந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கரிகாலனுடன் சேர்ந்து ரொமான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் எதிர்நீச்சலில் ஜோடியை மாத்திட்டிடீங்களா எனக்கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement