• Sep 21 2024

மிரட்டிய கதிர்... முகத்தடி கொடுத்த நந்தினி... குணசேகரனை ஏத்தி விட்ட ஜான்சிராணி... கோபத்தில் ஜனனி.. விறுவிறுப்பான 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வண்ணம் இருக்கின்றது.


அந்தவகையில் தற்போது இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் கதிர் 'என்ன சவுண்ட் ஓவரா போய்ட்டு இருக்கு, வாங்கி ரொம்ப நாள் ஆச்சு என்பதாலேயோ" என கேட்கின்றார். அதற்கு நந்தினி "இனி நீங்க என்னை அடிக்க அனுமதி கிடையாது" என திமிராக கூறுகின்றார்.


மறுபுறம் ஜான்சிராணி குணசேகரனிடம் "இந்த வீட்டுப் பொம்பிளைகளை மட்டும் நம்பாதே, உன் ஜோலியை மொத்தமாக முடிச்சிடுவாங்க" எனக் கூறுகின்றார். இதனைக் கேட்டதும் ஜனனி ஜான்சிராணியை முறைத்துப் பார்க்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.

Advertisement

Advertisement