• Nov 19 2024

அவங்களா இது..? உடல் எடை அதிகரித்து கொழு கொழுவென மாறிய ஜனனி... வைரல் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜனனி. இலங்கையை சேர்ந்தவரான இவர் சீசன் 3இல் கலந்து கொண்ட லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.


தன்னுடைய எதார்த்தமான சிரிப்பாலும் குழந்தைத்தனமான செயல்பாடுகளாலும் பல ரசிகர்களுக்கு விருப்பமான ஒருவராக மாறினார். இருப்பினும் ஜனனி குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து இடையிலேயே வெளியேற்றப்பட்டார்.


பின்னர் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் பலவும் வர ஆரம்பித்து விட்டதாக தகவல்களும் வெளிவந்தன. அந்தவகையில் முதற்கட்டமாக விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதாக கூறப்படுகின்றது.


சினிமாவைத் தாண்டி சமூகவலைத்தளங்களில் எப்போவும் ஆக்ட்வாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள்,வீடியோ என்பவற்றை பகிர்ந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

மேலும் இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் "பிக்பாஸிற்கு வரும் போது குழந்தை மாதிரி வந்தீங்க, இப்போ உடல் எடை அதிகரித்து இந்தளவிற்கு மாறி விட்டீர்களே" எனக் கமெண்டுகள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். 


Advertisement

Advertisement