• Nov 14 2024

ஜந்து புருஷன் காமெடி நடிகை விரைவில் விவாகரத்து செய்யப் போகின்றாரா…? அவரே கூறிய தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் இருந்தாலும் நடிகைகள் என ஒரு சிலரேயே நினைவில் வைத்துக்கொள்ள முடிகின்றது. வெள்ளித்திரையில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்களை விரல் விட்டு எண்ணலாம். அந்த வகையில் வடிவேலுவுடன் இணைந்து காமெடியில் கலக்கியவர் தான் நடிகை பிரியங்கா.

திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகி இருந்த பிரியங்கா தற்போது, சீரியல்களில் பிஸியாக நடித்து கலக்கி கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கை பயணம் குறித்து பல தகவல்களை பகிர்ந்திருந்தார்.

மேலும் அதில், திருமணத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட 10 வருடமாக சினிமா தொடர்பே இல்லாமல் குழந்தைகளை பார்த்துக்கொண்டு இருந்தேன். பார்ப்பவர்கள் எல்லாம் மறுபடி நடியுங்கள் என்று சொன்னார்கள்.

பசங்களுக்கும் நான் நடிக்க வேண்டும் என்றே ஆசைப்பட்டார்கள். அதனால் மீண்டும் நடிக்க வந்தேன். இந்த பத்து வருஷம் சினிமாவில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது. இப்போதுதான் சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்து இருக்கிறது வெகுவிரைவில் சினிமாவில் நடிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, எனது திருமண வாழ்க்கை சரியாக இல்லை இதனால் விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறேன். என் அம்மாவிற்கு புற்றுநோய்க்கான சிகிச்சை அளித்து வருகிறேன் இதற்கு அதிக அளவில் பணம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.நகைச்சுவை நடிகையாக இருந்து அனைவரையும் சிரிக்க வைத்த இவரின் சொந்த வாழ்க்கையின் வழிகளை கேட்டு ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

மேலும் சினிமாவில் காமெடி நடிகராக இருந்தாலும் சின்னத்திரையில் பயங்கரமான வில்லியாக நடிக்க ஆரம்பித்துள்ளார் பிரியங்கா. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற தொடரில் படுமோசமான வில்லியாக மிரட்டி வருகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement