மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
மேலும் அவர் தென்னிந்திய மொழிகளில் நடிக்கவும் ஆர்வமாக இருப்பதாக முன்பே அவர் சில பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
இவ்வாறுஇருக்கையில் இன்று சென்னைக்கு ஒரு கடை திறப்பு விழாவுக்கு ஜான்வி வந்து இருந்தார். காஞ்சிபுரம் பட்டு புடவைகள் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் அதனால் இந்த துணி கடையை திறந்து வைப்பது தனக்கு மகிழ்ச்சி என ஜான்வி தெரிவித்து இருந்தார்.
அத்தோடு ஜான்வியிடம் அடுத்து என்ன படங்களில் எல்லாம் நடிக்கிறீகள் என கேட்டதற்கு ஹிந்தியில் ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்த்தார். அதன்பிறகு தென்னிந்திய படத்திலும் விரைவில் நடிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
அது தமிழ் படமா இல்லை தெலுங்கு படமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் .
Listen News!