தனுஷ் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முதல் வெளியாகியிருந்த திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் ராஷி கண்ணா நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளதோடு தனுஷின் தாத்தா & அப்பாவாக பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
அத்தோடு இப்படத்தில் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்ததோடு இதில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் எனலாம்.
அதிலும் மேகம் கறுக்காத எனும் மெலோடி பாடல் காதல் ரசம் ததும்ப பலரது விருப்ப பிளே லிஸ்டில் ஆன் ரிப்பீட் மோடில் ஒலிக்க ஆரம்பித்தது. குறிப்பாக இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் அமைத்த ஒரு சிக்னேச்சர் ஸ்டெப் இளசுகளிடையே வைரலானதோடு, பலரும் சோஷியல் மீடியா, ரீல்ஸ் என இந்த ஸ்டெப்பை ஆடி பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த பாடலுக்கு ஜப்பானிய ஜோடிகள் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. குறிப்பாக பாடலில் இடம்பெற்றுள்ள அந்த சிக்னேச்சர் ஸ்டெப்பையும் இந்த ஜப்பானிய ஜோடி ஆடியுள்ளனர்.இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் உலகம் முழுவதும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள் மத்தியில் கூட மேகம் கருக்காதா பாடல் வைரலாகியுள்ளதை பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Japanese Couples ❤ #MeghamKarukatha #Thiruchitrambalam #DnA@dhanushkraja @MithranRJawahar @anirudhofficial pic.twitter.com/BMd9VpKT1h
Listen News!