• Sep 21 2024

ஜவான் பார்ட் 2 விரைவில் ..அட்லீ சொல்லியிருக்கிறத பாருங்க

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

நயன்தாரா ஷாருக்கான் நடிப்பில்  கடந்த 7ம் தேதி  சர்வதேச அளவில் வெளியாகி வசூல்வேட்டை நடத்தி வருகிறது ஜவான் படம். இப்படத்தின்  மூலம் ஹொலிவுட்டில் தன்னுடைய என்ட்ரியை சிறப்பாக்கியுள்ளார் இயக்குநர் அட்லி, நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர்.

நடிகர் ஷாருக்கான் -அட்லீ கூட்டணியில் கடந்த 7ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது ஜவான் படம். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியான நிலையில், உலகளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் வெற்றிநடை போட்டு வருகிறது. 

ஜவான் படம் சில தினங்களிலேயே 700 கோடிகளை தாண்டி வசூலித்துள்ளது. வாரயிறுதி நாட்களையொட்டி இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்மூலம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளார் ஷாருக்கான். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதையடுத்து படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தன்னுடைய படங்களில் எப்போதுமே Open End க்ளைமாக்சையே தான் வைத்துள்ளதாகவும் ஆனால் எந்தப் படத்திற்கும் இரண்டாவது பாகம் குறித்து யோசித்து தான் இதை செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் சூழ்நிலைகள் சிறப்பாக அமைந்தால் ஜவான் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பேன் என்றும் அட்லீ தெரிவித்துள்ளார். இந்தப் படத்திலும் Open endஐயே வைத்துள்ளதால் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்புடன் விரைவில் ரசிகர்களை சந்திப்பேன் என்றும் முன்னதாக கிரிக்கெட் விக்ரம் ரத்தோர் பயோ பிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement