• Sep 21 2024

நாளுக்கு நாள் எகிறும் 'ஜவான்' வசூல்... 6நாட்களில் இத்தனை கோடியா... வியப்பில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் இந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 


செப்டம்பர் 7-ம் தேதி வெளியான இந்தப் படம் பல விமர்சனங்களை கடந்தும் வெற்றிகரமாக வசூல் சாதனை புரிந்து வருகிறது.  


அந்தவகையில் முதல் நாள் உலகளவில் ரூ. 129 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த இப்படம் வெளியாகி தற்போது 6நாட்களைக் கடந்துள்ளது. 


இந்த 6நாட்களில் பெற்றுக் கொண்ட வசூல் விபரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி இதுவரை ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. எனவே இதை வைத்துப் பார்க்கும் போது ஜவான் விரைவில் ஜெயிலர் பட வசூலை முறியடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Advertisement

Advertisement