• Nov 10 2024

தனி ஒருவன் 2 வை உருவாக்க தனது அண்ணனிடம் மன்றாடிய ஜெயம் ரவி….!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் அறிமுகப் படத்திலேயே தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர்களில் ஒருவர் ஜெயம்ரவி. தமிழ் சினிமாவில் 'ஜெயம்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியது மட்டுமல்லாமல் அறிமுக படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றார். இப்படத்தை இவரது சகோதரனாகிய மோகன் ராஜா இயக்கியிருந்ததோடு, இவருக்கு ஜோடியாக நடிகை சதாவும் இப்படத்தில் தான் அறிமுகமாகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, மழை, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தார். எனினும் இப்படங்கள் யாவும் பேமிலி சென்டிமெண்டாக அமைந்திருந்தன. இதையடுத்து 'தாம் தூம், பேராண்மை, நிமிர்ந்து நில், போகன், தனி ஒருவன், மிருதன்' போன்ற படங்களினூடாக ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். எனினும் அப்படங்களிற்குப் பின்னரும் அவ்வப்போது லவ் சீன்களை கொண்ட சென்ட்டிமென்ட் படங்களில் நடித்தார்.

இப்படங்கள் யாவற்றிலும் நடிகர் ரவியின் சகோதரர் மோகன் ராஜா இயக்கிய 'தனி ஒருவன்' என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் , வசூலையும் அள்ளி கொடுத்தது. சுமார் 32 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் கிட்டத்தட்ட 105 கோடியை வசூலித்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தினுடைய இரண்டாம் பாகமும் உருவாகும் என இயக்குநர் ராஜா முன்பு அறிவித்திருந்தார்.

நடிகர் அரவித் சாமியின் மாரு பிரவேசமாக அமைந்த இந்த படத்தில் அரவிந்சாமியின் நடிப்பு வெகுவாக ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் ஈர்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வனின் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடித்து வருகிறார். அத்தோடு அகிலன், இறைவன் உள்ளிட்ட பல படங்களையும் தன்னுடைய கைவசம் வைத்துள்ளார். இவ்வாறாகத் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

எனினும் இந்தப் படங்கள் யாவும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்காமையினால் நடிகர் ஜெயம் ரவி தனது முந்தைய வெற்றிப் படமான தனி ஒருவன் 2 வை உருவாக்க தனது அண்ணனிடம் மன்றாடி வருவதாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அப்படம் தொடர்பான அதிகாரபூர்வ தகவலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement