நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாக இருக்கும் சைரன் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடிகர் ஜெயம் ரவி தனது குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோவில் சென்றுள்ளார். அப்போது விஜய் அரசியல் வருகை குறித்து இவ்வாறு பதிலளித்துள்ளார்.
ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ், அனுபாமா மற்றும் பலர் நடிப்பில் உருவாக்கிய திரைப்படம் ‘சைரன்’ . இந்த திரைப்படம் தனது மனைவி மற்றும் மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை ஜெயம் ரவி வித்தியாசமாக பழிவாங்குவது , அதை காவல்துறை அதிகாரியான கீர்த்தி சுரேஷ் கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.
அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், செல்வகுமார் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் பிப்ரவரி 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றிருந்த வேலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அடுத்ததாக பிரதர், ஜிடி ,காதலிக்க நேரமில்லை, தக்லைப் இப்படி 5 படம் பண்ணிட்டு இருக்கேன் ரிலீஸுக்கு தயாராகிட்டு இருக்கு. விஜய் அரசியல் பற்றி கேட்டதற்கு என் படம் தொடர்பா கேள்வி இருந்தா மட்டும் கேளுங்க பேசலாம் என்று மறுபடி மறுபடி கூறியுள்ளார். இந்த விடயம் விஜய் ரசிகர்களிடத்தில் அதிர்ப்பியை ஏற்ப்படுத்தியுள்ளது.
Listen News!