• Nov 17 2024

வெள்ளை தாடியுடன் வயதான லுக்கில் நிற்கும் ஜெயம் ரவி- என்ன அதுக்குள்ள இப்படி மாறிட்டாரே மனுஷன்?

stella / 1 year ago

Advertisement

Listen News!

அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் அறிதுகமாகியவர் தான் ஜெயம்ரவி.இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் தந்தது.

இந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாக உள்ளது. ஆதித்த கரிகாலன் கொல்லப்படுவதும், கடலில் இருந்து விழுந்த அருள்மொழி வர்மன் மீட்கப்பட்டு அரியணை ஏறும் போது செய்யப் போகும் வரலாற்று விஷயத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் அடுத்த மாதத்தில் இருந்து ஆரம்பம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்துடனே ஜெயம் ரவி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான அகிலன் படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அகிலன் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. ஆனால், பல மாதங்கள் கடந்த நிலையில், இன்னமும் அந்த படத்தின் ரிலீஸ் குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.


இந்நிலையில், வெள்ளை தாடியுடன் புதிய கெட்டப்பில் வயதான லுக்குடன் ஜெயம் ரவி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. யங்காக நான் சும்மாவே சீனுடி என ஸ்கூல் பையனாகவே கோமாளி படத்தில் நடித்த சாக்லேட் பாய் ஜெயம் ரவியா இப்படி வயதான தோற்றத்திற்கு மாறிவிட்டார் எந்த படத்திற்காக இந்த லுக் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். கூடவே பிக் பாஸ் வருண் இருப்பதால் வேல்ஸ் நிறுவனத்தின் புதிய படத்தில் தான் இந்த லுக்கா என்றும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.


Advertisement

Advertisement