தமிழ் சினிமாவில் 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. தனது அறிமுகப் படத்திலேயே சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி பல ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டிருக்கின்றார்.
அன்று தொடக்கம் இன்றுவரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவரின் திரைப்படங்கள் தொடர்ந்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற வண்ணம் தான் இருக்கின்றன.
அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியாகி இருந்தது. மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படமானது உலகளவில் ரூ. 450 கோடிக்கும் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'அகிலன்' என்ற திரைப்படம் வெளியாக தயாராகிய வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமல்லாது 'இறைவன், சைரன்' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
ஜெயம் ரவியைப் பொறுத்தவரையில் படங்களில் மட்டுமல்லாது அவ்வப்போது விளம்பரங்களிலும் நடிப்பார். அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு விளம்பரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம் நம்ம ஜெயம் ரவி.
இந்நிலையில் இதில் அவர் வாங்கியுள்ள சம்பள விபரம் தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது இந்த விளம்பரத்தில் நடிக்க ஜெயம் ரவிக்கு ரூ. 5 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Listen News!