நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் ‘அகிலன்’ படத்தின் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் இப்படம் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்தனர். கல்யாண கிருஷ்ணன் இயக்கிய இந்தப் படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அகிலன் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.சமீபத்தில், இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையைமைத்துள்ள படத்தின் முதல் பாடலான ‘துரோகம்’ பாடல் வெளியாகி இருந்தது.
இந்த படத்தில் ஜெயம் ரவி ரவுடியாக நடிக்க மறுபுறம், பிரியா பவானி சங்கர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மார்ச் 4 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அகிலன் திரைப்பட ட்ரெய்லர் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Listen News!