தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 'ஜெயம்' ரவி இன்று முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார்.
சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழிவர்மன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.இந்தப் படம் வெளியான பின்னர் ஜெயம் ரவியின் மார்க்கெட் ரேட் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பொன்னியின் செல்வன் முதல் வெற்றிப் பெற்ற அளவில், அதன் இரண்டாம் பாகத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
அதனால், பாக்ஸ் ஆபிஸில் கூட பொன்னியின் செல்வன் 2ம் பாகம் 300 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்ததாக சொல்லப்படுகிறது. ஜெயம் ரவியும் த்ரிஷாவும் மட்டுமே ஓரளவு தப்பித்துள்ளனர். பொன்னியின் செல்வனில் குந்தவையாக கிறங்கடித்த த்ரிஷா மீண்டும் பிஸியாகிவிட்டார்.
இன்னொரு பக்கம் ஜெயம் ரவியின் மார்க்கெட் ரேட் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் கடந்த சில மாதங்களாகவே நிறைய விளம்பரங்களில் ஜெயம் ரவி நடிப்பதை பார்க்க முடிகிறது.
அதேபோல் இறைவன், ஜன கண மன, சைரன், தனி ஒருவன் 2 ஆகிய படங்கள் ஜெயம் ரவியின் லைன் அப்பில் உள்ளன. இதெல்லாம் போக வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் பிரம்மாண்டமான படத்திலும் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் படத்தால் லைகா நிறுவனத்துக்கு லாபம் கிடைத்ததோ இல்லையோ, ஜெயம் ரவியின் படங்களுக்கு சூப்பரான மார்க்கெட் ஸ்பேஸை அமைத்துக்கொடுத்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!