• Sep 21 2024

15ஆண்டுகளை நிறைவு செய்த ஜெயம் ரவியின் 'சந்தோஷ் சுப்பிரமணியம்'.. இப்படத்தின் கதை எப்படி உருவானது தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியாகிய 'சந்தோஷ் சுப்பிரமணியம்' திரைப்படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன்  ராஜா என்பவர் தான் இயக்கியிருந்தார். மேலும் இது ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். 


அந்தவகையில் தெலுங்கில் இப்படம் 'பொம்மரீலு' என்ற பெயரில் வெளியாகியிருந்தது. இதனை எடுத்த பாஸ்கரும், ராஜாவும் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் நண்பர்கள் ஆவர். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தை நீதான் ரீமேக் செய்ய வேண்டும் என பொம்மரீலு படத்தின் ரீமேக் உரிமையை பெற்றிருந்த நடிகர் பிரகாஷ்ராஜ் ராஜாவிடம் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது அவர் சில பிரபலங்களை இந்த படத்திற்காக பரிந்துரைத்த போதிலும் ராஜாவுக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லாமல் இருந்துள்ளது. இதனால் ரவியையே இந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என எண்ணியுள்ளார். அந்த சமயத்தில் ஜெயம் ரவி ஏஜிஎஸ் நிறுவனத்தில் படம் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். 


பின்னர் அந்நிறுவனத்திடம் ராஜா பேச, பிரகாஷ்ராஜிடம் இருந்து படத்தின் ரீமேக் உரிமை ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு கை மாறியுள்ளது. மேலும் இதுகுறித்து பேட்டி ஒன்றில் ராஜா பேசுகையில் "பொம்மரீலுவை ரீமேக் செய்யும் போது இப்படம் முழுக்க முழுக்க ரசிகர்கள் சிரித்து மகிழக்கூடிய அளவில் இருக்க வேண்டுமென முடிவு பண்ணேன். அடுத்தது ஒரிஜினல் படத்தோட ஒப்பிடுகையில் தமிழில் காட்சிகளை இன்னும் உணர்வுப்பூர்வமாக எடுக்கணும்ன்னு நினைச்சேன். அந்த அளவுக்கு பார்த்து பார்த்து சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தை பண்ணினேன்" எனக் கூறியுள்ளார்.


அத்தோடு "இந்தப் படம் எடுக்குறப்ப எனக்கும் ரவிக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுச்சு. தன்னோட கேரக்டரை விட மற்றவர்கள் கேரக்டர்களுக்கு அதிக கவனம் செலுத்தியதாக என்னிடம் சொன்னான். நான் உடனே என்னைவிட நீதான் அதிகமா ஒழுங்கா பார்த்து உள்வாங்கி நடிக்கிறதா சொல்லி புரிய வச்சேன். கிளைமேக்ஸ் காட்சி 14 பக்க வசனம் இருந்தது. அதனை ஒரே டேக்ல பேசி ரவி அசத்தினான்.  ரவி நிஜமாகவே எமோஷனலாகிட்டான். அந்நேரம் ஒரு அண்ணனா நான் போய் சமாதானம் செய்றதுக்கு முன்னாடி பிரகாஷ்ராஜ் இரண்டு நிமிஷமா கட்டிப்பிடிச்சிகிட்டார்" என்றார் ராஜா.


அதேபோல் "முதலிலேயே இப்படத்தில் ஹீரோயின் ஜெனிலியா தான் என முடிவு பண்னேன். என்னுடைய முந்தைய ரீமேக் படங்களிலும் ஒரிஜினல் வெர்ஷனில் ஹீரோயினாக நடித்தவர்களே ரீமேக்கிலும் ஹீரோயினாக செய்திருந்தார்கள்" எனவும் அப்பேட்டியில் ராஜா கூறியிருந்தார்.

Advertisement

Advertisement