தமிழ்த் திரையுலகில் முன்னணி வகிக்கும் பெண் நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை த்ரிஷா. இவர் 'ஜோடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான காலம் தொடக்கம் இன்றுவரை தமிழில் கதாநாயகியாகவே நடித்து வருகின்றார்.
எனினும் தமிழில் இவருக்கான கதாநாயகி என்ற அந்தஸ்தைக் கொடுத்த முதல் படம் எதுவெனில் 'மௌனம் பேசியதே' என்ற படம் தான்.
அதனைத் தொடர்ந்து கமல், ரஜினி, அஜித், விஜய், விக்ரம், ஜெயம் ரவி எனப் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து ஜோடி போட்டு நடித்திருக்கின்றார். பல ஆண்டு காலமாக கதாநாயகியாகவே பணியாற்றி வரும் த்ரிஷா தனுஷ் நடிப்பில் உருவான 'கொடி' என்ற படத்தில் அரசியல்வாதியாக நடித்து அப்படம் மூலம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது அவர் உண்மையிலேயே தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் அவர் இணைய பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வந்த வண்ணமே இருக்கின்றன.
இவ்வாறான பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில் இவர் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆனது சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்த பிரபலங்கள் மட்டுமின்றி மற்ற நட்சத்திரங்களும் கலந்து சிறப்பித்து இருந்தார்கள். அந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சித்தார்த்தும் பங்கேற்று கொண்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் போது ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் அமைந்த படங்களின் மூலமாக வெளிவந்த பாடல்களை மேடையில் போடப்பட்டு ஒலிக்க விடப்பட்ட்து. அதில் ஒன்றாக 'ஆயுத எழுத்து' படத்தில் இடம்பெறும் "யாக்கை திரி..." என்ற பாடலும் மேடையில் ஒலித்தது.
கார்த்தி, ஜெயம் ரவி எனப் பலரும் அமர்ந்திருந்த அந்த மேடையில் கொஞ்சம் கூட வெட்கமோ கூச்சமோ படாது 'ஆயுத எழுத்து' படத்தில் இடம்பெறும் அந்தப் பாடலிற்கு த்ரிஷா மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் இருக்கையில் இருந்தபடியே நடனம் ஆடி இருப்பார்கள்.
Almost 18 years of #yaakaithiri #ayuthayeluthu but the vibing continues #siddarth and #Trisha ♥️#PonniyinSelvan pic.twitter.com/K1wiFyz6ll
இந்த வீடியோ ஆனது தற்போது வெளியாகிய நிலையில் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களிலும் அதிகளவில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.
Listen News!